கனடாவில் குடியேற முடிவெடுக்கும் முன், சில விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து பார்க்கும் போது கனடா செல்வசெழிப்பாக தெரிந்தாலும், இங்கும் மற்ற நாடுகளை போல பசியும், பட்டினியும் , வேலை இல்லா திண்டாட்டமும் இருக்கு. பெருகி வரும் வீட்டுவாடகையால் வாங்கும் சம்பளம் மாதக்கடைசி வரை பத்தாமலும் போகலாம். பொதுவாக இங்கு இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் நீங்கள் பெற்ற வேலை அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாங்க. இந்தியாவில் பெரும் பதவிகளில் இருந்தவர்கள் கூட இங்கு நல்ல வேலை கிடைக்கும் வரை, காபி கடைகளிலும் , பலசரக்கு கடைகளிலும் வேலை பார்ப்பது சகஜமாக பார்க்கலாம். கனடாவில் குடியுரிமை பெற முடிவெடுக்கும் முன் இந்த வேலைகளை இழிவாக நினைக்கும் எண்ணத்தை விடவேண்டும். இது உங்களை பயமுறுத்த சொல்லல, உங்கள் முடிவு அணைத்து விவரமும் தெரிந்த பின்பு எடுக்கும் தெளிவான முடிவாக இருக்கணும்.
கனடாவில் நிரந்தரமாக குடியேற விண்ணப்பம் செய்வதில் மூன்று நிலைகள் இருக்கு.
Profile பதிவு செய்தல்
விண்ணப்பிக்க அழைப்பு (ITA) வரும் வரை காத்திருத்தல்
விண்ணப்பிக்க அழைப்பு வந்த பிறகு
Profile பதிவு செய்தல்
முதலில் நீங்க Profile பதிவு செய்யவேண்டும். அப்பொழுது நீங்கள் பெரும் மதிப்பெண் பொறுத்து கனடா அரசாங்கம் உங்களை நிரந்தர விசா விண்ணப்பிக்க அழைக்கும். இதை Invitation to Apply (ITA) என்று அழைப்பார்கள். அதன் பிறகு நீங்கள் நிரந்தர விசா க்கு விண்ணப்பம் செய்வீர்கள்.
Profile நிறுவும் முன் முதலில் உங்கள் விவரங்களை Come to Canada பதிவுசெய்து நீங்கள் நிரந்தர குடியுரிமை பெற தகுதிபெறுகிறீங்களானு பாக்கணும். இதை Check Eligibility னு சொல்லுவாங்க. இதில் தகுதி பெற்றால் உங்களுக்கு personal reference code தரப்படும். இதில் தகுதி பெறவில்லை என்றால் உங்களால் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதில் தகுதி பெற இவை முக்கியமானது.
- ஆங்கில புலமை - IELTS அல்லது CELPIP எழுதி குறைந்தபட்சம் 7/10 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
- கல்வி சான்று - உங்கள் சான்றிதழ் பரிசோதிக்கப்பட்டு Education Credential Assessment ECA பெற வேண்டும்.
- பணி அனுபவம் - சமீபத்தில் NOC 0, A or B ஆகிய பிரிவுகளிலில் குறைந்த பட்சம் தொடர்ச்சியாக ஒரு வருடமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- குடிபெயர்ந்து வாழ பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், இந்த பணத்தை மற்றவரிடம் நீங்கள் கடனாக பெறக்கூடாது. மேலும் விவரங்களுக்கு Proof of Funds பார்க்கவும்.
இதில் தகுதி பெற்றால் உங்களுக்கு Personal reference code தரப்படும், இந்த எண் உங்கள் profile பதிவு செய்ய முக்கியமானது.
உங்கள் profile பதிவு செய்ய Create Express Entry Profile. Profile பதிவு செய்த பின் Job Bank இல் பதிவு செய்வது முக்கியம்.
உங்கள் profile பதிவு செய்தபின் கொடுக்கப்படும் மதிப்பெண் Comprehensive Ranking System (CRS) னு சொல்லுவாங்க. இந்த மதிப்பெண்ணை பொறுத்தே உங்களுக்கு நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படும். October 18, 2017 அன்று 436க்கு மேல் CRS பெற்றவர்களுக்கு நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்டார்கள்
விண்ணப்பிக்க அழைப்பு (ITA) வரும் வரை காத்திருத்தல்
அழைப்பு வரும் வரை காத்திருக்கும் போது நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை தயார் செய்து கொள்ளலாம்.
Police Clearance Certificates or PCC - இதை நீங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியுள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் பெற வேண்டும்.
Employer Reference letters - இதை கனடா அரசாங்கம் நிர்ணயித்துள்ள வடிவத்தில் பெற வேண்டும்.
Should be printed on company letterhead Should have Full name, Company’s address, Phone number,e-mail address, website and seal. Should be signed by your manager or supervisor. Should attach your manager/supervisor Business Card Should contain job title, detailed list of duties/responsibilities, dates you worked for the company, number of hours per week, annual salary.
Proof of funds - Bank or investment statement
Provincial Nominee Program - கனடாவில் உள்ள மாநிலங்கள் சிலரை தங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்க முடியும். அப்படி பரிந்துரைக்கும் பட்சத்தில் உங்களுக்கு நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விரைவில் கிடைக்கும். இது பற்றி தனி பதிவிடுகிறேன்.
விண்ணப்பிக்க அழைப்பு வந்த பிறகு
விண்ணப்பிக்க அழைப்பு வந்த பிறகு 90 நாட்களில் நீங்கள் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது உங்களின் சூழ்நிலை மாறியிருந்தால் தெரிவிக்க வேண்டும் (கல்யாணம், குழந்தை பிறப்பு போன்றவை) . குறிப்பிட்ட காரணத்தால் சில ஆவணங்கள் குடுக்க முடியாமல் போனால் Letter of Explanation (LOE) குடுக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் உங்களுக்கும் உங்கள் உடன் குடிபெயர்வருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை இணைக்க வேண்டும். இது உங்களுக்கு கொடிய மற்றும் தொற்றக்கூடிய வியாதிகள் இல்லை என்று உறுதியளிக்க. மருத்துவ பரிசோதனை CIC ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு Medical Examination for Canada PR
நீங்கள் விண்ணப்பித்து ஆறு மாத அளவில் விசா பதிய உங்கள் பாஸ்போர்ட் கோரப்படலாம். பாஸ்போர்ட்டை நீங்கள் அருகில் உள்ள VFS அலுவலகத்தில் குடுக்கலாம். அவர்கள் அதை கனடா தூதரகத்திற்கு அனுப்பி விசாவையும், நிரந்தர விசாவிற்கு உறுதியையும் (COPR ) பெற்றுத்தருவார்கள். உங்கள் விசாவில் குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கனடாவிற்குள் குடியேற வேண்டும்.